ஆஞ்சநேயர் கோயில் எதிரில் பிரியாணி கடையா ? நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி புகார் !
தேனி மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோயில் எதிரில் பிரியாணி கடை அமைக்கப்பட்டதை எதிர்த்து காவல்துறை கண்காணிப்பாளரிடம் இந்து முன்னணி அமைப்பு புகார் அளித்துள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக இந்து மத அடையாளங்கள் மற்றும் கோயில்கள் அருகில் பக்தர்களின் உணர்வுகளை அவமதிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் சின்னமனூர் அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் எதிரில், இஸ்லாமியர் ஒருவரால் பிரியாணி கடை அமைக்கப்பட்டுள்ளது.
இக்கடை அமைக்கப்படுவதால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் மனநிலை பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் கவலையில் மூழ்கினர். இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பு இப்பிரச்சனையில் தலையிட்டு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
தேனி மாவட்டம் சின்னமனூர் அக்ரஹாரம் பகுதியில் இந்துக்களின் புனிதமான ஆஞ்சநேயர் கோவில் எதிரில் அமைந்துள்ள இஸ்லாமியரின் R.J.பிரியாணி கடை மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம் இந்துமுன்னணி புகார் மனு.
இந்து கோயில்கள் அருகில் ஜெபக்கூடம் நடுத்தவது அதிகரித்து வரும் நிலையில், ஆஞ்சநேயர் கோவில் எதிரில் அசைவ உணவகம் அமைத்தது, இந்துக்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.