ஒகேனக்கல்லில் குளிப்பதற்கு தடை: ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்.!
ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற சம்பவம் அரங்கேறி வருகிறது.
ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற சம்பவம் அரங்கேறி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டது. தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு ஊரடங்கு தளர்வில் கோயில்கள், சுற்றுலா தலங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிக்கு நேற்று முதல் சுற்றுலாப் பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். ஆனால் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஒரே இடத்தில் குளித்தால் தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருவதற்கான தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கவில்லை.
உடனடியாக தடையை நீக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.