கர்நாடகாவில் கனமழை எதிரொலி.. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு.!
கர்நாடகா மாநிலத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி 16,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து தற்போது 18,000 கனஅடியாக அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள அணைகளில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி 16,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து தற்போது 18,000 கனஅடியாக அதிகரித்து வருகிறது.
இந்த தண்ணீர் அளவு மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனால் ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து செல்வதால் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.