முழுஊரடங்கை முன்னிட்டு ஒகேனக்கல் சாலையில் போலீசார் தீவிர கண்காணிப்பு.!
தருமபுரி மாவட்டம், இண்டூர் பேருந்து நிலையம் அருகாமையில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், இண்டூர் பேருந்து நிலையம் அருகாமையில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக, மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனையொட்டி மாவட்டம்தோறும் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் செல்லும் சாலையில் இண்டூர் அமைந்துள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள மக்கள் மருத்துவமனை, மற்றும் பலசரக்கு பொருட்கள் வாங்குவதற்கு அத்தியாவசிய தேவைகளுக்காக இண்டூருக்கு வருகை புரிவர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் சாலையில் தடுப்புகளை அமைத்து தீவிர வாகன சோதனைக்கு பின்னரே பென்னாகரத்திற்கு அனுமதித்து வருகின்றனர்.
தேவையின்றி வெளியில் சுற்றி வரும் பொதுமக்களை எச்சரித்து அவர்களை திருப்பி அனுப்பியும் வருகின்றனர். அதே போன்று மளிகை கடை முன்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக வட்டம் போடப்பட்டுள்ளது. அனைவரும் முககவம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரும் நபர்களுக்கே கடையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒகேனக்கல் சாலை வெறிச்சோடி காணப்படும் நிலையே தற்போது காணப்படுகிறது.