ஜி.கே.மணி எம்.எல்.ஏ. முயற்சியால் இன்று முதல் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் 6 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் 6 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் 2வது அலை பரவியிருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனிடையே கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் ஒகேனக்கல் சுற்றுலா தளம் மட்டும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகினர்.
அதில் மசாஜ் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பரிசல் ஓட்டிகள், சமையல் செய்யும் பெண்கள், ஓட்டல் உரிமையாளர்கள் என அனைவரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர். இது பற்றி பென்னாகரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜி.கே.மணியிடம் தொழிலாளர்கள் முறையிட்டனர். உடனடியாக ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இதனையடுத்து ஜி.கே.மணி எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு சுற்றுலா தளம் திறப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறினார்.
இந்நிலையில், ஒகேனக்கல்லில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுலா பயணிகள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழை சோதனை சாவடியில் காட்டினால் மட்டும் ஒகேனக்கல்லுக்கு அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், வணிகர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. அதனபடி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், மாலை 4.30 மணிக்கு மேல் வரும் வாகனங்களை சோதனை சாவடியில் திருப்பி அனுப்ப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Kathirnews