கர்நாடகாவில் பருவமழை தீவிரம்: ஒகேனக்கல்லில் நீர்வரத்து திடீர் உயர்வு.!
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபிணி அணை உயர்ந்து வருகிறது. இதனால் அந்த இரண்டு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி இரண்டு அணைகளில் திறந்து விடப்படும் நீரின் அளவு 2 ஆயிரத்து 126 கனஅடியாக உள்ளது. அது மட்டுமின்றி தமிழக எல்லையோரங்களில் கடந்த சில நாட்களாக மழை நீடித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் ஆற்றில் 3 ஆயிரம் கனஅடி நீர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த தண்ணீர் மேலும் உயர்வதற்கு வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் ஆற்றங்கரையோரம் கண்காணித்து வருகின்றனர்.