அக்டோபர் 16ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு!

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் அரசு விடுமுறை இருப்பதால், வருகின்ற சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

Update: 2021-10-13 11:31 GMT

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் அரசு விடுமுறை இருப்பதால், வருகின்ற சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கோரிக்கையை ஏற்று வருகின்ற சனிக்கிழமை (அக்டோபர் 16) அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைளில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்பட்டு வருவதாகவும் மாணவர்கள் விடுப்பின்றி பள்ளிக்கு வருகை புரிகின்றனர் என்றும், கணிசமான ஆசிரியர்கள் தங்களின் சொந்த மாவட்டங்களில் இருந்து வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இதன் காரணமாக 14.10.2021 மற்றும் 15.10.2021 ஆகிய இரண்டு நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் வார இறுதி நாளான 16.10.2021 சனிக்கிழமை அன்று விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை பரிசீலிக்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி வருகின்ற சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source: Daily Thanthi

Image Courtesy:Business Line


Tags:    

Similar News