கனமழை எதிரொலி: தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (திங்கட்கிழமை) நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி நாளை (நவம்பர் 30) வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் இதனால் குறிப்பிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், சேலம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், திருவாரூர், நாகை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, கடலூர், பெரம்பலூர், வேலூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Source: Dinamalar
Image Courtesy: Careerindia