கோவிலில் கிறிஸ்தவ திருமணமா... இந்து அமைப்பினர்கள் கடும் எதிர்ப்பு...
கோவிலில் கிறிஸ்துவ திருமணம் நடைபெறுவதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு.
திருவட்டீஸ்வரர் கோவிலில் பரிசுத்த மெய்விவாகம் நடக்க உள்ளதாக வெளியான பத்திரிக்கை காரணமாக சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த திருமண பத்திரிக்கை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படம் தற்போது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஒரு நிலையில்தான் அத்திருமணத்திற்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி, திருவட்டீஸ்வரர் ஆலயத்தில் வரும் ஜூன் முதல் தேதி தி.மு.க., மகளிர் அணி, வட்ட துணை செயலாளர் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, பரிசுத்த மெய்விவாகம் நடக்க உள்ளதாக பத்திரிகை ஒன்று வெளியாகி இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதை அடுத்து இந்து அமைப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோவிலில் கிறிஸ்தவ திருமணம் நடத்தக் கூடாது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இத்தகவல் குறித்து கோவில் நிர்வாகம் அதிகாரிகள் அறிந்த பின்னர் திருமணம் நடக்கும் குடும்பத்தினரை அழைத்து இந்த அழைப்பிதழ் தொடர்பாக விவரத்தை கேட்டிருக்கிறார்கள். அதன் பின்னர் அவர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தான் என்று உறுதியாக கூறியிருக்கிறார்கள் இருந்தாலும் சமூக வலைதளங்களில் பரவப்பட்ட செய்தி காரணமாக, கோவில் நிர்வாகம் இந்த திருமணம் கோவிலில் நடக்க கூடாது என்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
கோவில் செயலர் அலுவலர் கங்காதேவி, திருமணம் தொடர்பாக திருமணம் செய்து கொள்ளும் அனுப்பி இருக்கிறார். அதில் அவர் கூறுகையில், "அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே திருமணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. நீங்கள், வரும், ஜூன் மாதம் முதல் தேதி கோவிலில் திருமணம் செய்ய முன்பதிவு செய்துள்ளீர்கள். ஆனால், வேற்று மத முறைப்படி திருமண அழைப்பிதழ் அச்சடித்துள்ளீர்கள். எனவே இந்த திருமணம் கோவில் நடத்தக்கூடாது மேலும் எங்கள் கோவிலுக்கு செலுத்தியே கட்டணம் கோவிலுக்காக நன்கொடையாக கருதப்படும்"என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar