ஓசூரில் ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை.!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தளி பெல்லூர் என்ற கிராமத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தளி பெல்லூர் என்ற கிராமத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று இரவு இனோவா காரில் வந்த 3 பேர் கொண்ட ரவுடி கும்பல், வீட்டில் இருந்த ரியல் எஸ்டேட் அதிபர் லோகேஷை துப்பாக்கியால் சுட்டு கொன்றதாக கூறப்படுகிறது. அப்போது தலையில் பலத்த காயமடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து மற்ற ரவுடிகள் தலைமறைவாகி விட்டனர்.
லோகேஷ் மனைவி மற்றும் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் அதிபர் லோகேஷ் பணத்திற்காக கடத்தி கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.