மதமாற்றம் குறித்து புகார் அளித்தவரை மிரட்டி, தாக்கிய ஓசூர் காவல் ஆய்வாளர்.!
மதமாற்றம் குறித்து புகார் அளித்தவரை மிரட்டி, தாக்கிய ஓசூர் காவல் ஆய்வாளர்.!
மதமாற்றத்தை எதிர்க்கும் இந்து முன்னணியினரும் பா.ஜ.கவினரும் தாக்கப்படுவதும் மிரட்டப்படுவதும் வழக்கமாகி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து சமூக சேவை, கல்வி உதவி, பின்தங்கியவர்களுக்கு நிதி உதவி என பல பெயர்களில் நிதியை பெற்றுக் கொண்டு இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக பிரச்சாரம் செய்யும் மிஷனரிகள் உள்ளூர் காவல் துறையினரையும் அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு சுதந்திரமாக மதமாற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அது போன்று ஒசூர் அருகே தேர்பேட்டை என்ற இடத்தில் மதமாற்றம் செய்ய வந்தவர்களை காவல் துறையினரிடம் பிடித்துக் கொடுத்த இந்து முன்னணி அமைப்பினரை காவல் ஆய்வாளர் மிரட்டிய தகவல் வெளியாகி உள்ளது.
அந்தப் பகுதியில் ஜெப வழிபாடு செய்ய வந்ததாக கூறியவரை மதமாற்றம் செய்ய வந்ததாக அப்பகுதி மக்கள் விசாரித்த நிலையில் அவர் தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது இதைத்தொடர்ந்து அப்பகுதி இந்து முன்னணி அமைப்பாளர்களிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் உதவியுடன் மதமாற்ற வந்தவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்து முன்னணி பொறுப்பாளர் புகார் அளித்துள்ளார். ஆனால் மதமாற்ற வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் தந்த வரையே காவல் ஆய்வாளர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
மிரட்டப் பட்டவர் இதுகுறித்து உயர்மட்ட இந்து முன்னணி நிர்வாகிகளிடம் தெரிவித்த நிலையில் கோட்ட செயலாளர் உமேஷ் காவல் ஆய்வாளரிடம் பேச சென்றுள்ளார்.
நியாயம் கேட்டு வந்தவரை காவல் ஆய்வாளர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு சக காவலர் ஒருவருடன் சேர்ந்து தாக்கியுள்ளார். இதை எதிர்த்து உடனடியாக அராஜகத்தில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மற்றும் தாக்குதல் நடத்திய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் காவல் நிலையத்தின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.