திருப்பூரில் பயங்கரம்: இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவனை எரித்துக்கொன்ற மனைவி.!

ரங்கராஜனுக்கு 1 கோடி ரூபாய் கடன் இருந்தது. அதனை தீர்க்க வேண்டும் என்பதற்காக அவருக்கு ரூ. 3 கோடி ரூபாய்க்கு விபத்து காப்பீடு எடுத்திருந்தோம்.

Update: 2021-04-10 07:42 GMT

கடன் தொல்லை மற்றும் இன்சூரன்ஸ் பாலிசிக்காக கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவியால் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அருகே உள்ளது துடுப்பதி, அங்கு வசித்து வந்தவர் ரங்கராஜன், இவருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு கடன் இருந்துள்ளது. சமீபத்தில் அவருக்கு விபத்து ஒன்று ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனிடையே ரங்கராஜனை அவரது மனைவி ஜோதிமணி 55, மற்றும் உறவினர் ராஜா 41, ஆகியோர் சேர்ந்து நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு ஆம்னி காரில் அழைத்து சென்றனர். அப்போது அவர்களின் பெருமாநல்லூர் அருகே வந்தபோது, காரில் புகை வந்ததாகவும், இதனால் ரங்கராஜனை மீட்பதற்குள் கார் தீப்பிடித்து எரிந்து விட்டதால் பரிதாபமாக ரங்கராஜன் உயிரிழந்தார்.

இது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரது மனைவி ஜோதிமணியும், ராஜாவும் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது உண்மைகளை தெரிவித்தனர். ரங்கராஜனுக்கு 1 கோடி ரூபாய் கடன் இருந்தது. அதனை தீர்க்க வேண்டும் என்பதற்காக அவருக்கு ரூ. 3 கோடி ரூபாய்க்கு விபத்து காப்பீடு எடுத்திருந்தோம்.

அவருக்கு நாமினியாக மனைவி ஜோதிமணியை நியமித்திருந்ததும் தெரியவந்தது. இதனால் கணவர் விபத்தில் இறந்து விட்டால், பாலிசி 3 கோடி கிடைத்து விடும். இதன் காரணமாகத்தான் காரில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தினோம் என்ற உண்மையை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Similar News