தமிழை பேச முடியாமல் இருப்பதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. அமைச்சர் அமித்ஷா.!
தமிழை பேச முடியாமல் இருப்பதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. அமைச்சர் அமித்ஷா.!
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் பின்னர் அவர் பேசியதாவது:
உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழ் மொழியில் தன்னால் பேச முடியவில்லை. இதற்காக நான் தமிழக மக்களிடையே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மொழியின் கலாச்சாரம் மிகவும் தொன்மையானது. தமிழகத்தில் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டங்கள் நிறைவு பெறும். இவ்வாறு அவர் பேசினார்.