நேர்மையாளர்களுக்கு பிரச்சனை என்றால் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன்.. துணைவேந்தருக்கு கமல் ஆதரவு..!

நேர்மையாளர்களுக்கு பிரச்சனை என்றால் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன்.. துணைவேந்தருக்கு கமல் ஆதரவு..!

Update: 2020-12-05 14:48 GMT

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது நிதி முறைகேடு புகார்கள் வந்ததையடுத்து, விசாரனை நடத்த தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை கடந்த நவம்பர் 11ம் தேதி அமைத்து உத்தரவிட்டது.

இதனையடுத்து விசாரணைக்கு பொறுப்பேற்றுக்கொண்ட நீதிபதி கலையரசன், சூரப்பா மீதான புகார்களை நேரிலும் மின்னஞ்சலிலும் அளிக்கலாம் என்று கூறினார்.


இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நேர்மையாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என்று கமல் ஆவேசமாக பேசியுள்ளார். இவரது கருத்துக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதே போன்று பாஜகவினர் வரவேற்றும் பேசி வருவதை பார்க்க முடிகிறது. எது எப்படியோ நேர்மையானர்களுக்கு குரல் கொடுப்பது ஜனநாயக கடமையும் கூட.
 

Similar News