அந்த மொத்த முதலீடும் தமிழகத்துக்கு வந்தால், பத்தரை லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு! அசத்தும் எடப்பாடியார்!

அந்த மொத்த முதலீடும் தமிழகத்துக்கு வந்தால், பத்தரை லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு! அசத்தும் எடப்பாடியார்!

Update: 2021-01-03 07:20 GMT
அனைத்து துறைகளிலும் தேசிய விருதுகளை அதிக அளவில் பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் தான் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

இன்றைக்கு இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் உயர்ந்திருக்கிறது. 2011-ஆம் ஆண்டு 100-க்கு 32 சதவீதம் பேர் தான் உயர்கல்வி பயின்று வந்தார்கள். அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தற்போது 100-க்கு 49 சதவீதம் பேர் உயர்கல்வி பயின்று வருகிறார்கள்.

தமிழ்நாடு, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய விருது, உணவு தானிய உற்பத்தியில் தேசிய விருதான கிருஷி கர்மான் விருது, மின்மிகை மாநிலத்திற்கான தேசிய விருது, போக்குவரத்துத் துறையில் தேசிய விருது. நீர் மேலாண்மையில் தேசிய விருது. இப்படி அனைத்து துறைகளிலும் தேசிய விருதுகளை அதிக அளவில் பெறுகின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு.

தடையில்லா மின்சாரம் தமிழகத்திலே கிடைக்கின்ற காரணத்தினாலே தான் புதிய, புதிய தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்து வருவதால், இன்றைக்கு தமிழ்நாடு தொழில்துறையில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது.

2019-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தினோம். அதில் 304 நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது.

இது முழுவதுமாக தமிழகத்திற்கு வருவதன் மூலம் பத்தரை லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இந்த கொரோனா காலத்திலும் இந்தியாவிலேயே அதிக அளவில் புதிய தொழில் முதலீட்டாளர்களை கவர்ந்த மாநிலம் தமிழ்நாடு, சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலீடு செய்துள்ளனர் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியுள்ளார்.

Similar News