கோவையில் சட்டவிரோத ஜெபக்கூடம் - மக்கள் எதிர்ப்புக்குப் பின் ஜெபம் செய்யத் தடை.!

கோவையில் சட்டவிரோத ஜெபக்கூடம் - மக்கள் எதிர்ப்புக்குப் பின் ஜெபம் செய்யத் தடை.!

Update: 2020-11-30 19:23 GMT

கிறிஸ்தவ மிஷனரிகள் அனுமதி இன்றி வீடுகளிலும், சிறிய கட்டிடங்களிலும் ஜெபக் கூடம் என்ற பெயரில் சர்ச் நடத்துவது வாடிக்கையாகி வருகிறது. பலன் பொதுவாகக் கூடும் வகையில் வழிபாட்டுத் தலங்கள் அமைக்க அரசு அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது சட்டம்.

ஆனால் சிறிய அளவில் ஒரு அறை, வீடு என்று முதலில் பத்து, பதினைந்து பேரை அழைத்து ஜெபம் செய்யும் மிஷனரிகள், நாளடைவில் இடத்தை ஆக்கிரமித்து வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதி மூலம் தேவாலயமாகக் கட்டி விடுகின்றனர்‌. இதனால் இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆரம்பத்திலேயே இத்தகைய ஜெபக்கூடங்கள் குறித்து புகார் அளித்து நடவடிக்கை எடுக்கின்றன.
 

 

அந்த வகையில் கோவை மாவட்டம் எஸ்.எஸ் குளம் அருகே கீரணம் ஊராட்சியில் ஒரு தகரக் கொட்டகையில் மிஷனரிகள் ஜெபக் கூடம் நடத்திய தகவல் மக்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் அப்பகுதி மக்களுடன் ஜெபம் நடந்து கொண்டிருந்த பகுதியை முற்றுகையிட்டு அனுமதியின்றி ஜெபக்கூடம் நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து கோவில் பாளையம் காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர்‌. காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஜெபக் கூட்டம் நடத்தியவர் மற்றும் இடத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை ஜெபக் கூட்டம் நடத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

Similar News