வனப்பகுதியை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு: தாம்பரம் சார் பதிவாளர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு!

Update: 2022-02-18 09:17 GMT

சென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் வனப்பகுதிக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார் பதிவாளர் உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக பத்திரப்பதிவுதுறை ஏற்கனவே ஒரு சிறப்பு குழுவை அமைத்து அதற்கான விசாரணையை தொடங்கியுள்ளது. இதில் பல சார்பதிவாளர்கள் சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர். அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


அந்த வகையில் தற்போது தாம்பரம் சார் பதிவாளர் வெங்கடசுப்ரமணியன் என்பவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி தாம்பரம் வனப்பகுதிக்கு சொந்தமான நிலத்தை 8 விதமாக போலியான ஆவணங்களை தயார் செய்து பத்திரப்பதிவு செய்து வைத்துள்ளார். அதன்படி அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மட்டுமின்றி அவருக்கு உடந்தையாக இருந்த 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News