தமிழகத்தில் அதிகமாக பரவும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் - அரசின் நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் குழந்தைகளுக்கு அதிகமாக இன்ஃப்ளுயன்சியா என்று காய்ச்சல் பாதிக்கப்பட்டு வருகின்றது.

Update: 2022-09-16 02:24 GMT

பருவநிலை காரணமாக ஏற்படும் காய்ச்சல்களுக்கு குழந்தைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டுக்குள் இருந்து கல்வி கற்றார்கள். ஆனால் தற்போது இயல்பு நிலைமைக்குத் திரும்பி கொண்டு இருப்பதால் பள்ளிக்கு செல்லும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பருவ மழை காரணமாக குழந்தைகள் அதிகமாக நோய் படுகிறார்கள் நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


இதன் காரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் படுக்கைகளுக்கு கட்டுப்பாட்டு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. குழந்தைகள் நல மருத்துவமனையில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், எழும்பூர் மருத்துவமனையில் இன்று காலை அமைச்சர் சுப்ரமணியன் அவர்கள் ஆய்வு செய்தார்.


பின்னர் செய்தியாளர் இடம் பேசிய அவர் அனுமதிக்கப்பட்ட 121 குழந்தைகளுக்கும் சாதாரண காய்ச்சல் உள்ளது தமிழகம் முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 13 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் கூறுகிறார். காய்ச்சல் பரவலை தடுக்க அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Input & Image courtesy: Dinamani News

Tags:    

Similar News