எங்களை வைத்து சூட்டிங் மட்டும்தான் எடுத்தார்கள், ஒரு வருடம் ஆகியும் உதவி வரவில்லை - அம்பலமாகிய தி.மு.க அரசின் நாடகம்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் தங்களுக்கு நிறைவேறவில்லை நரிக்குறவர் பெண் வேதனை.
சென்னை மகாபலிபுரம் பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் தான் நரிக்குறவர் பெண்மணி அஸ்வினி என்பவர். தற்போது திமுக ஆட்சியில் முதல்வர் அவர்கள் தங்களுக்கு தருவதாக கூறியுள்ளார். எந்த ஊரு வாக்குறுதிகள் தங்களுக்கு வந்து சேரவில்லை என்பது குறித்து சமூக வலைத்தளம் மூலம் தன்னுடைய நிலைமையை எடுத்துக் கூறியிருக்கிறார். அந்த பெண் இவர் பேசிய இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பல்வேறு நபர்களுக்கு உண்மையை புரிய வைத்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு தீபாவளி என்று தமிழக முதல்வர் அவர்கள் அவர்களுடைய பகுதிக்கு சென்று பல நல்ல திட்டங்களை விளங்குவதாக கூறினார்.
இதுபற்றி நரிக்குறவ பெண் அவர் கூறுகையில், "கடந்த வருடம் முதல் அமைச்சர் அவர்கள் தங்களுக்கு வழங்குவதாக கூறிய இந்த சலுகைகள் ஆகுது, 12 பேருக்கு தலா ஒரு லட்சம் மற்றும் 30 பேருக்கு 10,000 லோன் கொடுக்கிறேன் சொன்னார்கள். பட்டா, வீடு என நிறைய சொன்னாங்க. ஆனால் எதுவும் தற்போது வரை நடக்கவில்லை" என்று தன்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார். இருப்பினும் வீடியோக்களுக்கு முன்பு, கடந்த வருடம் முதல் அமைச்சரின் இந்த வாக்குறுதிகள் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. ஆனால் அவை நிறைவேற்றப்பட்டதா? என்றும் எந்த ஒரு மீடியாவும் கண்டு கொள்ளப்படாத சூழ்நிலையில் ஒரு வருடம் கழித்து உண்மைநிலை வெளிவந்துள்ளது.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில் தங்களுக்கு கடன் வழங்குவதாக கூறிய வங்கியிடம் நாங்கள் பேசினோம். ஆனால் கடை இருந்தால் மட்டும் தான் நாங்கள் லோன் தருவோம் என்று கூறி அவர்கள் பத்தாயிரம் கடன் தருவதற்கு மறுத்துவிட்டார்கள். இதுதொடர்பாக பல்வேறு வகையில் மனுக்களை அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தங்களுடைய ஏழ்மை நிலையை எடுத்துரைத்தார் அஸ்வினி என்ற பெண்.
Input & Image courtesy: ABP News