மருத்துவ சங்கத் தலைவர் பதவியேற்பு விழா.. தெலங்கானா ஆளுநர், அமைச்சர் பங்கேற்பு.!
மருத்துவ சங்கத் தலைவர் பதவியேற்பு விழா.. தெலங்கானா ஆளுநர், அமைச்சர் பங்கேற்பு.!
இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு கிளை சார்பாக தமிழ்நாட்டின் மருத்துவ சங்க தலைவராக பொறுப்பேற்கும் விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், பிரபல சிறுநீரக துறை மருத்துவர் சௌந்தரராஜன், முன்னாள் தமிழ்நாட்டின் மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் ராஜா, தற்போது தமிழக மருத்துவ சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் ராமகிருஷ்ணன், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து புதிய தலைவராக டாக்டர் ராமகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பதக்கம் அணிவித்து, கௌரவிக்கப்பட்டு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சுகாதார செயலாளர் பேசியதாவது: தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு முன்னேற்றம் அடைந்து இருப்பதாகவும், உறுப்பு மாற்று தானத்தில் முதல் மாநிலமாக திகழ்வதாகவும், 2000 சிறு சிகிச்சையாகம் தொடங்க உள்ளதாகவும் கூறினார்.
இதனையடுத்து பேசிய அமைச்சர்: தமிழக அரசு கொரோனா இறப்பு வீதத்தை 1.7 சதவீதம் அளவுக்கு குறைத்துள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனவை கட்டுப்படுத்துவதற்காக வியூகம் வகுத்து கொடுத்தார். பிற மாநிலங்களைவிட கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகச் சிறப்பாக செயல்பட்டதாகவும் கூறினார்.
இறுதியாக பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்: 25 நிமிடத்தில் பீசா வருவதை மக்கள் பெருமையாக பேசி வருகின்றனர். ஆனால் 10 நிமிடத்தில் விபத்து என்றால் அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வருகிறது. இது தான் பெருமை என்றும் மருத்துவர்கள் சேவையை மதிக்க வேண்டும் என்றும் கூறினார்.