போதைப்பொருள் பழக்கம்... வழிப்பறி கும்பலாக மாறிய இளைஞர்கள்: கவனம் கொடுக்குமா தி.மு.க அரசு!

சிவகங்கையில் போதைப் பொருள் பழக்கம் காரணமாக பல்வேறு வழிப்பறி சம்பவங்களை இளைஞர்கள் செய்து வருகிறார்கள்.

Update: 2023-03-28 09:42 GMT

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதைப் பொருள் பழக்கம் காரணமாக இளம் வயதில் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதில் வித்திடுவதாக அமைந்து இருக்கிறது. குறிப்பாக சிவகங்கை மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரே நாளில் மட்டும் மூன்று வெவ்வேறு இடங்களில் இத்தகைய கொலை மிரட்டல்கள் செய்து வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. உடல் உழைப்பே இல்லாமல் இப்படி வழிப்பறி செய்து ஈசியாக பணத்தை ஈட்டலாம்? என்று இளைஞர்கள் தவறான எண்ணத்தை கொண்டு இருக்கிறார்கள்.


இது பற்றி ஆளும் தி.மு.க அரசு கவனம் கொண்டு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். குறிப்பாக மதுரை அருகே இருக்கும் வரிச்சூரை சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் நேற்று இரவு சிவகங்கை அருகே சாமியார் பற்றி கம்மாயில் மீன் வாங்க இரவில் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்று இருக்கிறார். குறிப்பாக இத்தகைய வழிப்பறியில் ஈடுபடும் இளைஞர்கள் மது போதையுடன் இரவில் அங்கு வரும் நபர்களை தாக்கி அவர்களிடம் இருக்கும் பணம், நகைகளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவரிடம் இருந்த 2000 ரூபாயை பறித்துக் கொண்டு இருக்கிறார்கள்.


அதேபோல் அதை வழியாக வந்த மோகன சுந்தரேஸ்வரன் மற்றும் அவருடைய மனைவி காவல் துறை ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். அவரையும் இந்த கும்பல் வழிமறித்து அவர்களிடம் இருந்த தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு மனைவியின் கண்முன்னே கணவரை அருவாளால் தாக்கி இருக்கிறார்கள். திருப்பத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த பணத்தையும் பறித்துக் கொண்டு சென்று இருக்கிறார்கள். அந்த இரண்டு இளைஞர்களும் சட்டக்கல்லூரி மாணவர்கள் என்று தெரிய வருகிறது. இந்த மூன்று சம்பவங்களும் ஒரே நெடுஞ்சாலையில் அடுத்தடுத்த இடங்களில் அரங்கேறி இருப்பதால் மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News