நீர்வரத்து அதிகரிப்பு.. புழல் ஏரி பிற்பகல் திறக்கப்படுகிறது.!

நீர்வரத்து அதிகரிப்பு.. புழல் ஏரி பிற்பகல் திறக்கப்படுகிறது.!

Update: 2020-12-04 13:10 GMT

புரெவி புயல் காரணமாக சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.


சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியில் இருந்து மாலை 3 மணிக்கு நீர் திறக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 21 அடி உயரம் கொண்ட ஏரியில் தற்போது 19.62 அடி உயரத்துக்கு நீர் நிரம்பியுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி, இன்று மாலை 3.00 மணிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.


இந்த நீர், நாரவாரிக்குப்பம், கிராண்ட்லைன், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், வழியே சென்று எண்ணூர் கடலில் கலக்கிறது. இதனையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும், மழையின் அளவைப் பொறுத்து நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் தற்போது வேகமாக நிரம்பி வருகிறது. அடுத்த வருடம் வரை குடிநீருக்கு பஞ்சம் ஏற்படாது என்று பொதுப்பணித்துறையினர் கூறி வருகின்றனர்.

Similar News