தமிழகத்தில் அதிகரிக்கும் கஞ்சா.. விற்பனையை தடுக்க ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0..
தமிழகத்தில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனை தடுப்பதற்காக ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கஞ்சா விற்பனையாளர்கள் பெரும்பளவில் மூலை, முடிக்கிலும் முளைத்து வருகிறார்கள். கஞ்சா விற்பனைகள் மீதான தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருக்கிறார். மேலும் தமிழகத்தில் கஞ்சா விற்பனை குறைப்பதற்காக தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு கட்ட வேட்டைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறிப்பாக ஆபரேஷன் கஞ்சா என்ற பெயரில் எத்தகைய நடவடிக்கைகளை செய்து வந்தார்கள். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் 47 ஆயிரத்து 248 கிலோ கஞ்சாவை போலீசார் பறி முதல் செய்தார்கள். மேலும் இது தொடர்பாக இருபதாயிரத்தி பதினான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் 25,721 கஞ்சா விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். எனினும் கஞ்சா விற்பனையை முற்றிலுமாக தமிழகத்தில் ஒலிக்க முடியாத ஒரு நிலைமை நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 நடவடிக்கையை போலீசார் தற்போது கையில் எடுத்து இருக்கிறது.
இந்த நடவடிக்கை மூலமாக பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சா விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கஞ்சா பதுக்குதல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீதான தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ச்சியான வகையில் தமிழகத்தில் அதிகரித்து வருவதை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் பொதுமக்களிடம் இது பற்றியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கில் தனியான ஈ-மெயில் மூலமாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
Input & Image Courtesy: News