இந்திய பொருளாதாரம் 9% வளர்ச்சி அடைய இலக்கு - ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!

இந்திய பொருளாதாரம் ஒன்பது சதவீதம் வளர்ச்சி அடைய இதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்.

Update: 2022-12-13 14:00 GMT

இந்தியாவின் பொருளாதாரம் வரும் 2047 ஆம் ஆண்டிற்குள் 8 முதல் 9 சதவீதம் வளர்ச்சி அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது என்று இந்திய அரச வங்கியின் முன்னாள் ஆளுநரும், சென்னை பொருளாதார வங்கி நிறுவனத்தின் தலைவருமான ரங்கராஜன் கூறி இருக்கிறார். குறிப்பாக சென்னை துறை அலுவலகத்தின் சார்பில் சுங்கத்துறை சட்டம் 1962 இயற்றப்பட்டதன் 60 ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை மண்டல சங்கத்துறை தலைமை ஆணையர் அவர்கள் வரவேற்று சிறப்புரை ஆற்றுகையில் கூறும் பொழுது, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தான் சுங்கத்துறை சட்டம் கொண்டுவரப்பட்டது.


ஆனால் அதற்கு முன்பே வர்த்தகம் மற்றும் வரி வசூலிக்கும் முறை நம் நாட்டில் இருந்தது. இங்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வரி வசூலுக்கும் முறை இருந்ததாக குறிப்பிட்டார். மேலும் சுங்கவரி சட்டம் இயற்றப்பட்ட 60 ஆண்டுகளைக் கொண்டாடும் தருணத்தில் நம் நாடு திறமையான வரி நிர்வாகம் செயல்பாட்டில் உள்ளது. போதைப்பொருள், தங்கம், விலங்குகள், வன உயிரிகள் கடத்தல் ஆகியவற்றை கண்டுபிடித்து திறம்பட தடுத்து வருகிறோம். பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு உலக நாடுகளில் இந்தியா இணைந்து பணியாற்றி வருகிறது. விலங்குகளை கடத்துவது ஒட்டுமொத்த உலகுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. சுங்கத்துறை இத்தகைய முயற்சிகளை தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் சென்னை பொருளாதார கல்வி நிறுவனத்தின் தலைவருமான ரங்கராஜன் அவர்கள் குறிப்பிடும் பொழுது நாட்டில் வரி குறைக்கப்பட்ட பிறகு வருமான வரி செலுத்துவது 96 சதவீதம் அதிகரித்தது.


குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு உள்நாட்டில் தயாரிக்க வேண்டும். இறக்குமதி அனுமதிக்க வேண்டும், அதே சமயம் இறக்குமதிக்கு முழு அளவில் அனுமதிக்காமல் கட்டுப்படுத்த வேண்டும். கடந்த 1977 முதல் 1980 ஆண்டு வரை உலக அளவில் ஏற்றுமதி இந்தியாவின் பங்களிப்பு இரண்டு சதவீதமாக இருந்தது இறக்குமதி வரிகள் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் 1990 ஆம் ஆண்டில் பெருமக்களை சந்தித்தது பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக 2000 ஆண்டு உலகமயமாக்கல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு அபார வளர்ச்சி கண்டது. மேலும் 2047 ஆம் ஆண்டிற்குள் இந்திய பொருளாதாரம் ஒன்பது சிலவிதமான செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Input & Image courtesy: The Hindu News

Tags:    

Similar News