இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த டிரோன் சோதனை மையம்

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழில் பூங்காவில் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ட்ரோன் சோதனை மையம் 45 கோடி செலவில் அமைய உள்ளது

Update: 2023-08-17 17:30 GMT

தமிழ்நாட்டில் வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையின் மேம்பாட்டுக்கான முகவாண்மை நிறுவனமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது . இந்த துறையின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பொது சோதனை மையங்கள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒன்று ஆளில்லா விமான பொது சோதனை மையமாகும்.


தற்போது இந்த சோதனை மையம் கர்நாடக மாநிலம் சித்திரதுர்காவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் தனது பயன்பாட்டுக்காக உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், மோட்டார்கள், பேட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு பாகங்களை தனித்தனி மையங்களில் சோதனை செய்து வருகின்றன. இது செலவினத்தை அதிகரிப்பதோடு சோதனைகளை மேற்கொள்ள காலதாமதமும் ஆகின்றது. இந்த இடர்பாடுகளை கலையும் நோக்கத்துடன் மத்திய அரசின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஆளில்லா விமான சோதனை மையத்தை அமைக்க டிட்கோ நிறுவனம் திட்டமிட்டது .


மத்திய அரசின் மானியத்துடன் செயல்படும் இந்த திட்டத்தை செயல்படுத்த டிட்கோ ஒளிவு மறைவற்ற ஒப்பந்த புள்ளியை கோரியது. அதன் அடிப்படையில் கெல்டிரான், சென்ஸ் இமேஜ் ஸ்டாண்டர்ட் டெஸ்டிங் அண்ட் காம்ப்ளயன்ஸ் மற்றும் அவிக்ஷா  ரீ டைலர்ஸ் முதலான நான்கு நிறுவனங்கள் டிட்கோ உடன் இணைந்து 45 கோடியில் ஆளில்லா விமான சோதனை மையத்தை அமைக்க உள்ளன .


இந்த சோதனை மையம் ஆளில்லா விமானத்தின் ஆராய்ச்சி வடிவமைப்பு மேம்பாடு உற்பத்தி மற்றும் சோதனைகளுக்கு தேவையான பல்வேறு வசதிகளை ஒரே இடத்தில் சர்வதேச தரத்தில் வழங்கும். இந்த சோதனை மையம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் வடகாலில் உள்ள சிப்காட்டு தொழில் பூங்காவில் சுமார் 2.3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது .ஆளில்லா விமான உற்பத்தியில் தமிழ்நாடு சர்வதேச மையமாக திகழவும் பாதுகாப்பு துறையில் இந்தியாவின் தனிச்சார்பு தேவையை பூர்த்தி செய்யவும் இந்த சோதனை மையம் வழிவகுக்கும்.


SOURCE :DAILY THANTHI

Similar News