இமாலய சாதனை படைத்த மத்திய அரசு... இயற்கை வளத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் தெரியுமா உங்களுக்கு?
இந்தியாவின் வியப்பளிக்கும் சதுப்புநிலப் பரப்பு அதிகரிப்பு.
ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சதுப்புநிலப்பரப்பைக் கொண்டது இந்தியா. இந்த நிலங்கள் பல்லுயிர் பெருக்கம், காலநிலை மாற்றங்கள், நன்னீர் கையிருப்பு மற்றும் மனிதர்களின் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த இயற்கை சூழலைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக இந்தியா தற்போது 1.33 மில்லியன் ஹெக்டேர் பரப்புடன் கூடிய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த 75 சதுப்புநிலங்களைக் கொண்டுள்ளது.
கடந்த 1982-ம் தேதி முதல் 2013-ம் ஆண்டு வரை இந்தியாவில் 26 சதுப்புநிலங்கள் மட்டுமே இருந்தன. இதற்கு பிந்தைய 2014-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை 49 புதிய சதுப்புநிலங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இதில் 2022-ம் ஆண்டு மொத்தம் 28 நிலப்பகுதிகள் சதுப்புநிலப்பரப்பாக அறிவிக்கப்பட்டன.
நாடு முழுவதும் உள்ள சதுப்புநிலங்களை அதன் இயற்கைத்துவம் மாறாமல் நிர்வகித்து பாதுகாப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் பலனாக காலநிலை சார்ந்த இலக்குகளுடன் கூடிய நீடித்த வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த மேம்பாட்டு இலக்குகளை வகுத்துக்கொண்டு இந்தியா வெற்றி கண்டு வருகிறது.
Input & Image courtesy: News