அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டம் நீட்டிக்கப்படும்: துணை முதலமைச்சர் பேச்சு.!
அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டம் நீட்டிக்கப்படும்: துணை முதலமைச்சர் பேச்சு.!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் மேம்படுத்தப்பட்ட சலுகைகளுடன் நீட்டிக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் அறிவித்துள்ளார்.
2021 2022ம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பட்ஜெட் உரையில், தற்போதைய ஒட்டுமொத்த காப்பீட்டு தொகையான 4,00,000 ரூபாய் 5,00,000 ரூபாயாக அதிகரிக்கப்படும் எனவும், குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கான காப்பீட்டு தொகை 7,50,000 ரூபாயிலிருந்து 10,00,000 ரூபாயாக உயர்த்தப்படும் என துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.