மதம் மாற்றி திருமணம்.. கையில் பச்சிளம் குழந்தை... ஓடிய கணவர்.. இளம் பெண் தர்ணா போராட்டம்?
மதம் மாறி திருமணம் செய்து கொண்ட பெண்ணின் கணவர் ஓடியதால் ஜமாத்திடம் உதவி கேட்கும் நிலை.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தற்பொழுது கைக்குழந்தையுடன் புர்கா அணிந்த பெண் அங்குள்ள ஒரு பள்ளிவாசலில் முன்பு அமர்ந்து தனக்கு நியாயம் வேண்டும் என்று பள்ளிவாசல் ஜமாத்திடம் நீதி கேட்கும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக 3 மாத குழந்தையுடன், பள்ளிவாசல் முன்பு அமர்ந்து போக சொன்னதும் வாக்குவாதத்தில் இளம் பெண் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் சிதம்பரத்தில் அம்பலத்தாடி தெருவை சேர்ந்த பக்கிம் என்பவர் அங்குள்ள ஐஸ்கிரீம் கடையில் வேலை பார்த்து வருகிறார். வேலை பார்க்கும் பொழுது அப்பொழுது அங்கு மகேஸ்வரி என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது, பிறகு அங்குள்ள பள்ளிவாசலில் மகேஸ்வரி ஆயிஷாவாக மத மாற்றம் செய்யப்பட்டு அங்கு உள்ள ஜமாத் நிர்வாகிகளில் முன்னிலையில் ஜனவரி மாதம் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
அடுத்த இரண்டு வாரங்களிலேயே அவருக்கு குழந்தை பிறந்ததாகவும் தெரிய வருகிறது. குழந்தை பிறந்த இந்த பிறகு அந்த பெண்ணின் கணவர் தலைமறைவாகி விட்டார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த இளம்பெண் குழந்தைக்கு தந்தை வேண்டும் என்று கூறி பள்ளிவாசல் முன்பு குடும்பத்தினருடன் மகேஸ்வரி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Polimer News