பழமைவாய்ந்த 2 கோயிலை இடிக்க தி.மு.க. அரசுக்கு இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

Update: 2022-04-15 06:24 GMT

திருப்பூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக இரண்டு கோயில்களை இடிப்பதற்கு திமுக அரசு முயற்சி செய்தது. இதனை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்து சென்று இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பள்ள பாளையத்தில் கருப்பராயசுவாமி கோயிலும், வடுகபாளையத்தில் கருவந்தராய சுவாமி கோயிலும் உள்ளது. இக்கோயில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறி திமுக அரசு இடிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ள பாளையத்தைச் சேரந்த கோபிநாதனும், வடுகபாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நூறாண்டுகள் பழமை வாய்ந்த கோயில் வருவாய்த்துறை ஆவணங்களில் இடம்பெறவில்லை. மேலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. எனவே இந்த இரண்டு கோயில்களையும் இடிப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை கேட்டு இரண்டு ஊர்பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News