சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்கிறார் ஓ.பி.எஸ்.!
சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்கிறார் ஓ.பி.எஸ்.!
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் கடைசி இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டசபை கடந்த 2ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கப்பட்டது. இதனையடுத்து பேரவையில் முதலமைச்சர் விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி மற்றும் பல்வேறு திட்டங்கள் பற்றி அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதில் பல்வேறு வகையான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த பட்ஜெட்டை தமிழக மக்கள் எதிர்பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.