நீதிபதிகளுக்கு மிரட்டல்: தஞ்சையில் பதுங்கிய ஜமால் இஸ்லாமை தூக்கிய கர்நாடக போலீஸ்!

Update: 2022-03-25 07:03 GMT

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், அரசு விதித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கினர்.

இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தது. அதே போன்று தமிழகத்திலும் ஹிஜாப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு நேரடியாக ரகமத்துல்லா என்பவர் கொலை மிரட்டல் விடுத்தார். அவருடன் சேர்ந்து சிலரும் மிரட்டல் விடுக்கின்ற தொனியில் பேசினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நீதிபதிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பை கர்நாடக அரசு போட்டது. இதன் பின்னர் மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்த நிலையில், ரகமத்துல்லாவை கர்நாடகா போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர் கூறிய தகவலின்படி தஞ்சையில் பதுங்கியிருப்பதாக ஜமல் இஸ்லாம் என்பவரை கர்நாடகா போலீசார் கைது செய்தனர். அவரை பெங்களூரு அழைத்துச்சென்று விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிஜாப் வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Daily Thanthi

Image Courtesy: India Legal

Tags:    

Similar News