6,10ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகம்.!
6,10ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகம்.!
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே கணினி அறிவியல் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. தற்பபோது 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் நடத்தப்படுவதால் மாணவர்கள் அனைவரும் கணிப்பொறி எளிதாக கற்றுக்கொள்வார்கள். பின்னாளில் கணினித்துறையில் மிகப்பெரிய வல்லுநராக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.