அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாரா நடிகர் விஜய்? கட்சிப் பெயரை பதிவு செய்ததாகத் தகவல்கள்.!

அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாரா நடிகர் விஜய்? கட்சிப் பெயரை பதிவு செய்ததாகத் தகவல்கள்.!

Update: 2020-11-05 18:36 GMT

அரசியலில் எப்பொழுது வேண்டுமானாலும் நுழையலாம் என்று தமிழ்நாட்டில் காத்திருக்கும் நடிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விஜயகாந்த், ரஜினி, கமலை தொடர்ந்து தற்பொழுது நடிகர் விஜயும் தேர்தல் அரசியலில் குதிக்க நடவடிக்கை எடுத்து விட்டதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி வெளியிட்டுள்ள செய்தியின்படி நடிகர் ஜோசப் விஜய் தன்னுடைய 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் இருந்த ரசிகர் மன்றங்களை / நற்பணி இயக்கங்களை பெயர் மாற்றி, முழுமையான அரசியல் கட்சியாக மாற்றி விட்டதாகவும் அதற்கு 'அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயர் வைத்து பதிவு செய்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. 

தந்தி டிவி செய்திகளின்படி விஜய் ஏற்கனவே இந்த கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்து விட்டார். 



அந்த செய்தியின் படி இந்த கட்சியின் தலைவராக பத்மநாபன் பெயர் பதிவு செய்யப்பட்டு, விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பொதுச் செயலாளராகவும் அவரது தாய் ஷோபா பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடிய விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று தந்தி டிவி தெரிவித்துள்ளது. இது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Similar News