கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இப்படி ஒரு சலுகையா.. அதிரடி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இப்படி ஒரு சலுகையா.. அதிரடி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!.

Update: 2021-01-10 13:21 GMT

தமிழக அரசு, அரசு உதவி பெறும் கலை அறிவியல், பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா கார்டு இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இது போன்று பாடங்கள் நடக்கும் சமயத்தில் இணைய வசதிக்கா பணம் செலுத்த முடியாத மாணவர்களும் நிறைய பேர் உண்டு.

அவர்களின் நலன் கருதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அதிரடி உத்தரவை பறிப்பித்துள்ளார். அதன்படி அரசு கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை தினமும் 2ஜிபி டேட்டா கார்டு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் 9.69 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் பயனடைவர்.

இந்த திட்டம் எல்காட் நிறுவனத்தின் மூலமாக விலையில்லா 2ஜிபி டேட்டா கார்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Similar News