ஈஷாவில் உற்சாகமுடன் தொடங்கியது மகாசிவராத்திரி.. பக்தர்கள் கண்டுகளிக்க நேரடி லைவ்.!

உலகம் முழுவதும் இன்று மகாசிவராத்திரி மிகவும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சிவன் கோயில்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் தொடங்கும் விழாவானது நாளை காலை வரையில் சிறப்புடன் நடைபெறுகிறது.

Update: 2021-03-11 13:21 GMT

உலகம் முழுவதும் இன்று மகாசிவராத்திரி மிகவும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சிவன் கோயில்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் தொடங்கும் விழாவானது நாளை காலை வரையில் சிறப்புடன் நடைபெறுகிறது.




 


மகாசிவராத்திரியில் பக்தர்கள் அனைவரும் தூங்காமல் சிவன் அருளை பெற்று மகிழ்வார்கள். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மகாசிவாராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா ஏற்பாடுகளை ஈஷா மையம் சிறப்புடன் செய்துள்ளது. இந்நிலையில், கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் விமரிசையாக மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு, சத்குரு முன்னிலையில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் பங்கேற்று சிறப்பிப்பார்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஒரு சிலர் மட்டுமே நேரடியாக கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 



மற்ற அனைத்து பக்தர்களுக்கும் வீடுகளில் இருந்தே நேரடியாக பார்ப்பதற்கு தொலைக்காட்சி மற்றும் இணையதளங்கள் மற்றும் யூடியூப் மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் விடிய விடிய இசை மற்றும் பூஜைகள் நடைபெறும். இதில் பக்தர்கள் பங்கேற்று சிவன் அருளை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவை கதிர் வலைதளங்களிலும் நேரடியாக காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News