முதலீட்டை ஈர்ப்பதில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.. தமிழக அரசு விளக்கம்.!

முதலீட்டை ஈர்ப்பதில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.. தமிழக அரசு விளக்கம்.!

Update: 2020-12-30 18:35 GMT

முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்: முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. 10 ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 9.4 சதவீதம் மட்டுமே செயல்பாட்டிற்கு வந்துள்ளது என்பது தவறானது.

கடந்த 10 ஆண்டுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் செயல்பாட்டு விகிதம் 82.4 சதவீதமாகும். 10 ஆண்டுகளில் 26, 309 புதிய தொழில் திட்டங்கள், உற்பத்தியை துவங்க அனுமதி உத்தரவு பெற்றுள்ளன.

கடந்த 3 நிதியாண்டுகளில் மட்டும் 1,164 புதிய உயர் அழுத்த மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளில் தமிழக உற்பத்தி துறையின் மொத்த மதிப்பு கூட்டல் சராசரியாக 12.7 சதவீதம் அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. தேசிய சராசரியை காட்டிலும் அதிக வளர்ச்சியை தமிழகம் தொடர்ந்து பெற்று வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News