கொடைக்கானல்: வனவிலங்குகள் அச்சுறுத்தலால் கூடாரம் அமைத்து தங்க தடை!

கொடைக்கானலில் கூடாரம் அமைத்து தங்குவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் அது போன்று கூடாரம் அமைத்து தங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-11-23 13:07 GMT

கொடைக்கானலில் கூடாரம் அமைத்து தங்குவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் அது போன்று கூடாரம் அமைத்து தங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல். சுற்றுலாவுக்கு பெயர் போன ஊர் எனவும் கூறலாம். இந்த ஊருக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகை புரிவது வழக்கம். அது போன்று வருபவர்கள் புதிதாக கூடாரம் அமைத்து தங்கும் கலாச்சாரம் பரவியதாக கூறப்படுகிறது.

வனப்பகுதியை ஒட்டி கூடாரம் அமைத்து தங்குவதால் வனவிலங்குகளால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே கொடைக்கானல் மலைப்பகுதியில் கூடாரம் அமைத்து தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசுடைய தடையை மீறி கூடாரம் அமைத்து கொடுத்தால் நில உரிமையாளர்கள் மீது காவல்துறை வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் எச்சரிக்கை செய்துள்ளார். இந்த தடை உத்தரவுக்கு கொடைக்கானல் பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Source: News 7 Tamil

Image Courtesy: Planetof Hotels


Tags:    

Similar News