ஆண்கள், பெண்கள் இரண்டரை வருடம் ஆட்சி செய்தால் சிறப்பாக அமையும்.. துணை முதல்வர்.!
ஆண்கள், பெண்கள் இரண்டரை வருடம் ஆட்சி செய்தால் சிறப்பாக அமையும்.. துணை முதல்வர்.!;
திட்டம் மற்றும் வளர்ச்சிதுறை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான 6 நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் பெண்களுக்கு தமிழக அரசு பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிராக அரங்கேறும் வன்முறைகளை முற்றிலும் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்த்து நிற்க அனைத்து அரசு உயரதிகாரிகளும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆண் இரண்டரை ஆண்டும் பெண் இரண்டரை ஆண்டும் அரசை ஆட்சி செய்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று நான் சிந்தித்து உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.