தமிழகத்தில் திறக்கப்பட்டது ஐடிஐ, மற்றும் தொழிற்பயிற்சி பள்ளிகள்.!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஐடிஐ மற்றும் தொழிற்பயிற்சி பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-19 06:10 GMT

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஐடிஐ மற்றும் தொழிற்பயிற்சி பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழில் பயிற்சி பெறுகின்ற மாணவர்களின் வேலை வாய்ப்பினை கருத்தில் கொண்டு அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் பொருள் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஐடிஐ, தொழிற்பயிற்சி பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் முககவசம் அணிந்த பின்னரே அனுமதி அளிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News