ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு.. மருத்துவமனை திறப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்டலம் என்ற கிராமத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்கி திறந்து வைத்தார்.

Update: 2021-07-12 04:53 GMT

தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு என்று பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்டலம் என்ற கிராமத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்கி திறந்து வைத்தார். 


இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது: கொரோனா தொற்று பரவலை தடுக்க அனைவரும் தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதனிடையே முடிவில் அவர் ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு எனக் கூறினார். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அவர் முடிவுரையின்போது ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை உபயோகிக்க வில்லை. இதற்கு காரணம் திமுகதான் என குற்றம்சாட்டப்பட்டது.

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை நீக்கியது திமுக அரசுக்கு பெருமை என்று அந்த கூட்டணியில் உள்ள ஈஸ்வரன் எம்.எல்.ஏ., பேசினார். இது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. திமுக அரசுக்கு மட்டுமின்றி ஈஸ்வரனுக்கும் கண்டனங்கள் வலுத்தது.

Similar News