ஜெயலலிதா பல்கலைக்கழகம்: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்.!
ஜெயலலிதா பல்கலைக்கழகம்: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்.!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் புதியதாக பல்கலைக்கழகம் தொடங்கப்படுவதற்கு, இன்று தமிழக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
அதே போன்று இன்றைய பேரவை கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பகழன் தாக்கல் செய்தார். விரைவில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படும் என கூறப்படுகிறது.