ஜெயலலிதா பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு!

ஜெயலலிதா பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு!

Update: 2021-01-28 18:00 GMT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இனிமேல் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நேற்று (27ம் தேதி) சென்னை மெரினாவில் தமிழக அரசு சார்பில் ஜெயலலிதாவிற்காக கட்டப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவின்போது லட்சக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசு உடைமையாக மாற்றப்பட்டது. இதனையடுத்து இன்று வேதா நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து லேடி வெலிங்டன் கல்லூரியில் ஜெயலலிதாவின் வெண்கல சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் பேசும்போது, “பிப்ரவரி 24 ஜெயலலிதா பிறந்த நாள் இனி வருடம்தோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

அன்றைய நாள் சென்னை மெரினாவில் திறக்கப்பட்ட ஜெயலலிதா சிறைக்கு அரசு சார்பில் வருடம்தோறும் மரியாதை செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News