தனக்கு பிடித்த 107 சட்டைகள்.. ஜீன்ஸ்.. பனியன்களை திருடிச்சென்ற கொள்ளையன்.!

மதுரையில் துணிக்கடை ஒன்றில் புகுந்த கொள்ளையன் ஒருவன் தனக்கு ஏற்றார் போன்று துணிகளை திருடிச் சென்றுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Update: 2021-07-19 11:45 GMT

மதுரையில் துணிக்கடை ஒன்றில் புகுந்த கொள்ளையன் ஒருவன் தனக்கு ஏற்றார் போன்று துணிகளை திருடிச் சென்றுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மதுரையில் உள்ள சாரதி டெக்ஸ்டைல்ஸ் கடையில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர் 42 இன்ச் அளவுடைய சுமார் 107 சட்டைகள், 38 இன்ச் அளவுடைய ஜீன்ஸ் பேண்ட்கள், 95 சைஸ் அளவுடைய பனியன்கள் உள்ளிட்டவைகளை திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. 

அது மட்டுமின்றி 150 பட்டு சேலைகள், நைட்டிகள் உள்ளிட்ட சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது.இது தொடர்பாக போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Similar News