வனியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!

Update: 2022-03-31 04:00 GMT

அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி உள்ளிட்டவைகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது. இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள்ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து வன்னியர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில் இன்று (மார்ச் 31) தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்ஒதுக்கீடு நீடிக்குமா, அல்லது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி ரத்து செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அந்த மக்கள் மனதில் எழுந்துள்ளது.

Source: Dinamani

Image Courtesy: Vikatan

Tags:    

Similar News