கள்ளக்குறிச்சி: 100 தூய்மை பணியாளர்களுக்கு, புத்தாடை கொடுத்து பாதபூஜை செய்த தம்பதி.!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே 100 துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு தம்பதியினர் பாதபூஜை செய்து அசத்தியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே 100 துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு தம்பதியினர் பாதபூஜை செய்து அசத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட நாள் முதல் இன்று வரை தூய்மை பணியாளர்களின் பணி மிக மிக முக்கியமானவை ஆகும். அது போன்று பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் இளந்தமிழன், இவர் என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அவரது மனைவி செல்வி, இவர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையாக உள்ளார்.
இந்த தம்பதியினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை கவுரவிக்க, 100 பேருக்கு புத்தாடை எடுத்துக்கொடுத்து சுவையான உணவுகளை பரிமாறியும், பாதபூஜை செய்துள்ளனர்.மேலும், அவர்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கையுறை, மரக்கன்றுகளை வழங்கியுள்ளனர். தூய்மை பணியாளர்களை கவுரவித்த தம்பதியினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.