கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இடவசதியின்றி கர்ப்பிணிகள் அவதி.!

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண்களுக்கு போதுமான இடவசதியின்றி அவதியுற்றுவரும் நிலை உருவாகியுள்ளது.

Update: 2021-07-02 03:02 GMT

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண்களுக்கு போதுமான இடவசதியின்றி அவதியுற்றுவரும் நிலை உருவாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக கர்ப்பிணிகள் அதிகமான அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் போதிய இடவசதியின்றி பிரசவம் முடிந்த பல பெண்கள் கண் சிகிச்சைப் பிரிவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த பிரிவிலும் போதுமான படுக்கை வசதி இல்லாததால், பச்சிளங் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து கொண்டு சிகிச்சைப் பெற்று வருவதாக கர்ப்பிணிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 20 படுக்கைகள் மட்டுமே இருக்கின்ற நிலையில், 50 கர்ப்பிணிகள் இருப்பதால் இடவசதியின்றி அவதியடைவதாக மகப்பேறுவுக்காக வந்த பெண்கள் வேதனை அடைந்துள்ளனர்.

உடனடியாக இடவசதி ஏற்படுத்த வேண்டும் என கர்ப்பிணிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News