பூந்தி வாங்கிக் கொடுத்து சிறுமியை கர்ப்பமாக்குவேன்.. கானா என்ற போர்வையில் சுற்றுபர்கள் மீது போஸ்கோவில் கைது செய்ய வேண்டும்! இயக்குநர் மோகன் ஜி!

சிறுமிகள் மற்றும் பெண்களை மிகவும் அவதூறான வகையில் கானா பாட்டு என்ற போர்வையில் மிகவும் ஆபாசமான முறையில் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது போன்றவர்கள் மீது ஏன் போஸ்கோ சட்டம் பாயவில்லை என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

Update: 2021-12-23 02:10 GMT

சிறுமிகள் மற்றும் பெண்களை மிகவும் அவதூறான வகையில் கானா பாட்டு என்ற போர்வையில் மிகவும் ஆபாசமான முறையில் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது போன்றவர்கள் மீது ஏன் போஸ்கோ சட்டம் பாயவில்லை என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

சினிமா என்பது பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு மட்டுமின்றி அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை வரவழைக்கும் ஒரு சாதனம் என்றும் சொல்லலாம். ஆனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பெண்களை கேலி செய்யும் வகையில் பாடல் மற்றும் வசனங்கள் இடம் பெறுகிறது. இதனால் சிறுவர்கள் கூட தவறான பாதைக்கு செல்லும் நிலை உருவாகிறது.

அதே போன்று தற்போது டோனி ராக் எ போட்டி கானா என்ற பெயரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சரவெடி சரண் மற்றும் டோனி ராக் ஆகிய இரண்டு கானா பாடகர்கள் பாட்டு பாடியுள்ளனர். அதில் சரவெடி சரண் பாடிய பாட்டு சிறுமிகளை ஆபாசமாக சித்தரிக்கின்றார். 

அவர் பாடும் சில வரிகளில், எனக்கு மஜாவாக மாட்டிக்கிச்சு எனக்கு ஏத்த லடுக்கி (சிறுமி) பால்வாடியில் வாங்கி கொடுத்தேன் பூந்தி, 8வது பாஸான உடனே எடுக்க வச்சேன் வாந்தியை என்று மிகவும் ஆபாசமான முறையில் பாடியது மட்டுமின்றி சிறுமிகளை அவமானமும் படுத்தியுள்ளார்.

அவரது பாடல் தற்போது சமூக வலைதளங்களில் கண்டனத்துக்கு ஆளாகி வருகிறது. இந்தியாவில் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்து வரும் நாடுகளில் முதன்மையான நாடாகவும் உள்ளது. 

அப்படி இருக்கும் சமயத்தில் சிறுமிகளை கொச்சைப்படுத்தும் விதமாக பாடல் பாடிய கானா பாடகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக இயக்குநர் மோகன் ஜி, தனது ட்விட்டர் பதிவில், கானா பாடகர் பாடும் பாடலை ரீ ட்விட் செய்து, இது போன்றவர்கள் மீது போஸ்கோ சட்டம் பாய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அவரை போன்று பலரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News