கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்ததால், பழையாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் உருவான புயலின் காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதிக அளவாக இரணியலில் 28 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, தக்கலையில் 9 சென்டிமீட்டரும், பேச்சிப்பாறை, சிற்றாறு ஆகிய இடங்களில் 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மேலும், தாமிரபரணி, பழையாறு ஆகியவற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்கிறது. குழித்துறை தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்து செல்வதையும் காணமுடிகிறது. தொடர் மழையால் விவசாயி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் வாழை, மரவள்ளி, நெல் உள்ளிட்ட பயிர்களை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.