கன்னியாகுமரியில் கனமழை: செங்கல் சூளையை மூழ்கடித்த மழைநீர்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு போன்ற அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

Update: 2021-05-28 03:11 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு போன்ற அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதில் ஆற்றங்கரையோரம் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வழிகிறது.

இதன் காரணமாக அருகாமையில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளதால் பெரும் இன்னலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.


 



இந்நிலையில், தக்குறிச்சி அருகே உள்ள வரகுமண் விளை பகுதியை சேர்ந்தவர் அம்பிராஜன் 52, இவர் அப்பகுதியில் சுமார் 20 வருடங்களாக செங்கல் சூழை நடத்தி வருகிறார். ஏழு லட்சம் செங்கல் விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில், அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளது. பல ஆயிரம் அச்சுகல் அறுத்தும் அதனை உலர்த்தும் நிலையில் வைக்கப்பட்டிருந்ததும் இவை அனைத்து தற்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் மூழ்கி அனைத்து செங்கல்களும் சேதமடைந்துள்ளது.

மேலும், கல் அறுக்க பயன்படுத்தும் இயந்திரமும் நீரில் மூழ்கி இழுத்து சென்றுள்ளது. இதனால் ஐம்பது லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சீசனில் இந்த வெள்ளப்பெருக்கு எதிர்பாராத விதத்தில் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அதே போன்று பத்மநாபபுரம் தொகுதி பேச்சிப்பாறை ஊராட்சி மணியன்குழி, திக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் குலை தள்ளிய நிலையில் இருந்த வாழை தோட்டங்களில் மழை நீர் புகுந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

Similar News