ஆடி அமாவாசை ! கன்னியாகுமரி கடலில் நீராட தடை !

இந்துக்களின் மிக முக்கிய சுப நிகழ்வில் ஆடி அமாவாசையும் ஒன்றாகும். இந்த நன்நாளில் இந்துக்கள் அனைவரும் அதிகாலை முதலே கடல் மற்றும் ஆறுகள் மற்றும் புண்ணிய குளங்களில் புனித நீராடி தங்களின் முன்னோர்களை நினைத்து பூஜை செய்து, தகர்ப்பணம் கொடுத்து வருவது வழக்கம்.

Update: 2021-08-06 11:26 GMT

இந்துக்களின் மிக முக்கிய சுப நிகழ்வில் ஆடி அமாவாசையும் ஒன்றாகும். இந்த நன்நாளில் இந்துக்கள் அனைவரும் அதிகாலை முதலே கடல் மற்றும் ஆறுகள் மற்றும் புண்ணிய குளங்களில் புனித நீராடி தங்களின் முன்னோர்களை நினைத்து பூஜை செய்து, தகர்ப்பணம் கொடுத்து வருவது வழக்கம்.

அதே போன்று கன்னியாகுமரியில் உள்ள முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித் துறை கடலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு ஆடி அமாவாசை வருகின்ற 8ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனிடையே தற்போது கொரோனா வைரஸ் தொற்று 3வது அலையை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடுவதற்கும், தர்ப்பணம் கொடுப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy:Whatshot

https://www.maalaimalar.com/devotional/worship/2021/08/06142945/2889313/Aadi-Amavasai-Kanyakumari-Beach-devotees-not-allowed.vpf

Tags:    

Similar News